காகத்துக்கு ஒரு கவிதை
அதிகாலை உன்
அழைப்பே எனக்கு
அலாரமாகிப் போனது !
சாய்ந்து சாய்ந்து நீ
பார்க்கும்போது ,
பாடல் ஒன்று நினைவுக்கு வரும் !
பழைய சாதம் வைத்தால்
பாசாங்கு செய்வாய் !
பட்சணங்கள் கண்டால்
ஆர்பரித்து அருகே வருவாய் !
என் சிறு குழந்தைகளின்
உணவூட்டலுக்கு
உதவி செய்தாய் !...
யாரும் இல்லா நேரம்
கரைந்து கரைந்தே
வருந்திப் போவாய் ...
காகமே ! நீ கரைந்தே
எம்மையும்
அன்பால்
கரைய
வைக்கிறாய் ...
வாழ்ந்து போகட்டுமே !
சில பற்றற்ற
மனிதர்களுக்கு மத்தியில்
பாசமாக
இந்த காகங்களும் !.....
-சங்கீதா செந்தில்