கலங்கரை ஒளி
மழைவந்தாலும் காற்றடித்தாலும் கலங்காது காத்திட
கரையில் நிற்கும் உற்றத் துணைவனாய்
மிதப்பவற்கு விடியலாய் வீசிடும் ஒளியில் உதயமாய்
உருகிடும் உள்ளங்களுக்கு ஓங்கிய உறுதியாய்
கலங்கிய உள்ளங்களுக்கு கலங்கரை விளக்காய்
பட்டொளி வீசி பறந்திடும் உன் ஒளியை
பல மைல்கள் கண்டதும்
பயந்த உள்ளங்களுக்கு பரவச கதிராய்
பறந்து விரிந்த கடலில்
தத்தளிக்கும் கப்பல்களுக்கு
விடிவெள்ளியாய் நீ இருப்பது போன்று
நானும் மாற
உன் ஒளி என்னுள் ஒளிர
வழி செய்வாய்!