தண்ணீர்
தானாய் நிரம்பி வழிகிற நீரில்
நடத்துகிறோம் வாழ்க்கை,
அதற்கும் வழியில்லையென்றால்
தள்ளுகிறோம் நாக்கை.
நனைக்கவாவது
நீர் தேவையென வேண்டுகையில்
வாய்திறக்கின்றன
அரசும், ஆகாயமும்...
எங்கள் உயிரைக்
குடிப்பதற்கு!
தானாய் நிரம்பி வழிகிற நீரில்
நடத்துகிறோம் வாழ்க்கை,
அதற்கும் வழியில்லையென்றால்
தள்ளுகிறோம் நாக்கை.
நனைக்கவாவது
நீர் தேவையென வேண்டுகையில்
வாய்திறக்கின்றன
அரசும், ஆகாயமும்...
எங்கள் உயிரைக்
குடிப்பதற்கு!