சண்முக ப்ரியா கி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சண்முக ப்ரியா கி |
இடம் | : வாலாஜாபேட்டை, vellore |
பிறந்த தேதி | : 28-Oct-2000 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Jul-2019 |
பார்த்தவர்கள் | : 27 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
தமிழ் மாணவி
என் படைப்புகள்
சண்முக ப்ரியா கி செய்திகள்
கைவுதற கால்நடுங்க வாயுலர மெய்வியர்ப்ப
கண்ணீர் அரும்ப கயல்விழியாள் நின்றாள்
குதித்தோடும் மானலைத்தச் செங்கண் புலிவந்து
தன்முன்னே நின்ற பொழுது.
பா வகை இல்லை ...
எதுகை மோனை எதுவும் தேவையில்லை...
படிக்கும் விதம்தான் சந்தம்...
சொற்களுக்கான பந்தம்...
அது கற்பனைக்கடலுக்குச் சொந்தம்!
கவிதை புனைய எந்தம்
தமிழுக்குப் புதுவழி நித்தம்!
மரபினைத் தள்ளி வைத்து,
இலக்கணம் தள்ளி வைத்து,
யாப்பில்லாமல் யாக்கப்படுவது...
-புதுகவிதை!...
வெங்கதிர் கண்ட தாமரை போன்ற முகத்துடனே...
தண்மதி கண்ட தாமரை போன்ற கரத்துடனே...
தீயிலிட்ட வெண்ணெய் போல் மனமுருகி,
மையரிக்கண் நீரரும்ப தொழுது நின்றாள்....
கருமுகில் கண்டு கூத்தாடும் மஞ்ஞை கொண்ட
குறிஞ்சிவாழ் வேலவனின் பூந்தாமரை கண்ட பெண்.
கருத்துகள்