sarapriyan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sarapriyan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-May-2017 |
பார்த்தவர்கள் | : 28 |
புள்ளி | : 3 |
காபி குடிக்கும்
களிமண் குடுவை கூட
கலை பொக்கிஷம்
ஆகிவிடுகிறது
உன் இதழ்கள்
அதை
தீண்டுகையில்.....
மை வடித்த
கண்களில்
பொய் வடித்து
புதுமைகள் செய்கிறாய்...
நீர் வடித்த
கார்குழளில்
எனை நீந்த
செய்கிறாய்...
பால் வடித்த
பளிங்கு
தேகத்தால்
என்னை
பரிகாசம்
செய்கிறாய்...
சாயம் வடித்த
இதழ்களால்
எனை
சாதரனமாக
கொல்கிறாய்...
உன் உடைகளின்
நேர்த்தியால்
என் இதயத்தில்
உறைவாளை
சொருகிறாய்...
உன் உதடு
வழி வார்த்தையால்
எனை
உறையவைக்கிறாய்....
உன் இதயத்தில்
காதல்
இருந்தும்
ஏதேதோ
சொல்லி
எனை ஏங்க
வைக்கிறாய்...
உள்ளொன்று
வைத்து
புறமொன்று பேசும்
உவமை இல்லா
மலரே
தயவு செய்து
எனை உனதாக்கி
கொள்...
இல்லை உன்
உதடுகளால்
கொல்(pls kill me)....
அழகுப் பெண்ணே
நான் பார்த்த பெண்களில்
மிகப்பெரிய முரன் நீ
நீயாக அழைக்கும்போது
உருகும் பனி மழைநீ
நான் தவருகள் செய்யும்போது
என்னை உருக்குலைக்கும்
எரிமலை நீ
அன்பின் உருவில்
வருடும் தென்றல் நீ
உன் பேச்சைக் கேளாதபோது
சுழன்று அடிக்கும்
சூறாவளி நீ
உன் அழகு கண்களால்
கருனையும் காட்டுவாய்
கோபம் கொண்டால்
குருவாளும் வீசுவாய்
உன் கருனை முகம்
கடுங்கோபம் கொள்ள
செய்த
ஒரு கொடும் பாவி நான்...
எந்த பிறவியின் பந்தம்
என்று தெரியவில்லை
இந்த பிறவியிலாவது
முடித்து வை
இந்த ஏழைச்சிறுவனின்
உன்னை நோக்கிய கடுந்தவத்தை