கோபம்

அழகுப் பெண்ணே

நான் பார்த்த பெண்களில்
மிகப்பெரிய முரன் நீ

நீயாக அழைக்கும்போது
உருகும் பனி மழைநீ

நான் தவருகள் செய்யும்போது
என்னை உருக்குலைக்கும்
எரிமலை நீ

அன்பின் உருவில்
வருடும் தென்றல் நீ

உன் பேச்சைக் கேளாதபோது
சுழன்று அடிக்கும்
சூறாவளி நீ

உன் அழகு கண்களால்
கருனையும் காட்டுவாய்
கோபம் கொண்டால்
குருவாளும் வீசுவாய்


உன் கருனை முகம்
கடுங்கோபம் கொள்ள
செய்த
ஒரு கொடும் பாவி நான்...


எந்த பிறவியின் பந்தம்
என்று தெரியவில்லை

இந்த பிறவியிலாவது
முடித்து வை
இந்த ஏழைச்சிறுவனின்
உன்னை நோக்கிய கடுந்தவத்தை

எழுதியவர் : சாரா பிரியன் (22-May-17, 4:09 pm)
சேர்த்தது : sarapriyan
Tanglish : kopam
பார்வை : 128

மேலே