கூழாங்கற்கள்
*
1. சாதுர்யம்…!!
வளைந்து கொடுப்பவள்
வாழ்ந்து சாதிக்கிறாள்
வம்பு செய்கிறாள்
பிரச்னையால்
வெந்து சாகிறாள்
வளைந்து கொடுப்பது வாழ்க்கை
வம்பு செய்து தற்கொலை.
*
2. சேவல்
தெருவில்
ஒரு வீட்டில்
காணாமல் போனது
சேவல்
பக்கத்துத் தெருவில்
ஒரு வீட்டில் சமைக்கும்
கோழிக்கறி
குழம்பு வாசனை.
*
3. துணிச்சல்…
சைக்கிள் ஓட்டத் தெரியாது?
பைக் ஓட்டத் தெரியாது? நடை
பயணமாகவே காலம் கடத்தும்
தாத்தாவைத் தன் இருசக்கர
வாகனத்தில் உட்காரச் சொல்லி
மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்கிறாள் துணிச்சலாய் பேத்தி!
ந.க.துறைவன்.
*