vincy - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vincy |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Jun-2020 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 8 |
பிரம்மனின் ஓவிய தீற்றலில்
கை தவறி உதறியதில்
தெறித்து விழுந்த சிறு துளியோ
உன் உதட்டோர மச்சம் இல்லை
அவன் படைப்பின் மீதே அவன் கொண்ட
மோகத்தில் வியர்த்து தெறித்த
வியர்வை துளி காய்ந்து
வண்ணம் மாறியதோ
மெய்யெழுத்தாய் உன் முகத்தில்
பதிந்த மச்சத்தில்
என் தலை எழுத்தும் மாறிப்போனதடி
நீ சம்மதித்தால் நாம் உயிர்மெய்யெழுத்தாய்
உரு மாறிப்போவோமடி
உறவுகள்
ஒற்றை சொல்லில் அடங்கி இருக்கு
பலவித உறவுகள்
உணர்வுக்கு உயிர் கொடுத்தும்
உயர்ந்திட தோள் கொடுத்தும் , நெருக்கமாய் ,
உருக்கமாய் மழைத்துளி மேவிய மேகக்கூட்டமாய்
அரவணைத்து செல்லும் சொந்தங்கள் , சொந்தங்கள் அல்ல
நான் இருக்கேன் உன்னோடு என்ற
அசரீரி வார்த்தை கொண்டு
சகல வித்தைகளையும் விதைகளாக்கி
பதியமிடும் பாசக்கார உறவுகள்
வருடங்களாய் கட்டிவைத்து காத்ததை விரல் சொடுக்கும் நேரத்தில்
வீழ்த்திவிடாதீர்கள் புரிதல் எனும் பாங்கின்றி
வலிகள்
விபத்தினால் உண்டாகும் வலி
தீருமே சில நாளில்
வார்த்தையினால் உண்டாவது தீருமோ
கடுகென பொறிவோர் தரும் வலி
தீர்ந்திடும் அந்நேரமே உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும் வித்தகர்கள் தரும் வலி
தீருமோ எந்நாளும்
பொருள் இழப்பு ,உயிர் இழப்பில்
ஏற்படாத காயமும் வலியும்
மாந்தரின் மனக்கசப்பில் விழும்
வார்த்தையில் வருகிறதே
வலியினால் வழி மாறலாம்
வழியினால் வலியும் மாறலாம்
எனவே மனம் மாறாதிருப்போம்
வசை பாடாதிருப்போம்.
தாசனே கண்ணதாசனே
உணவில் உண்டு
உடையில் உண்டு
உல்லாசத்தில் உண்டு
உலகால உண்டு
தன்னுயிரை நேசிப்பதிலும் உண்டு
தன்னிச்சைக்காய் திரியவுமுண்டு
போகத்திலுமுண்டு
மோகத்திலுமுண்டு
உறக்கத்திலுமுண்டு
எண்ணற்ற தாசன்கள்
ஆயின் நானறிந்த தாசன்களில்
கவியில் விளையாடி
கருத்து மழையில் நனையவிட்ட
கண்ணதாசனே
நல்லதொரு தாசன்....
பிரம்மனின் ஓவிய தீற்றலில்
கை தவறி உதறியதில்
தெறித்து விழுந்த சிறு துளியோ
உன் உதட்டோர மச்சம் இல்லை
அவன் படைப்பின் மீதே அவன் கொண்ட
மோகத்தில் வியர்த்து தெறித்த
வியர்வை துளி காய்ந்து
வண்ணம் மாறியதோ
மெய்யெழுத்தாய் உன் முகத்தில்
பதிந்த மச்சத்தில்
என் தலை எழுத்தும் மாறிப்போனதடி
நீ சம்மதித்தால் நாம் உயிர்மெய்யெழுத்தாய்
உரு மாறிப்போவோமடி
உறவுகள்
ஒற்றை சொல்லில் அடங்கி இருக்கு
பலவித உறவுகள்
உணர்வுக்கு உயிர் கொடுத்தும்
உயர்ந்திட தோள் கொடுத்தும் , நெருக்கமாய் ,
உருக்கமாய் மழைத்துளி மேவிய மேகக்கூட்டமாய்
அரவணைத்து செல்லும் சொந்தங்கள் , சொந்தங்கள் அல்ல
நான் இருக்கேன் உன்னோடு என்ற
அசரீரி வார்த்தை கொண்டு
சகல வித்தைகளையும் விதைகளாக்கி
பதியமிடும் பாசக்கார உறவுகள்
வருடங்களாய் கட்டிவைத்து காத்ததை விரல் சொடுக்கும் நேரத்தில்
வீழ்த்திவிடாதீர்கள் புரிதல் எனும் பாங்கின்றி
வலிகள்
விபத்தினால் உண்டாகும் வலி
தீருமே சில நாளில்
வார்த்தையினால் உண்டாவது தீருமோ
கடுகென பொறிவோர் தரும் வலி
தீர்ந்திடும் அந்நேரமே உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும் வித்தகர்கள் தரும் வலி
தீருமோ எந்நாளும்
பொருள் இழப்பு ,உயிர் இழப்பில்
ஏற்படாத காயமும் வலியும்
மாந்தரின் மனக்கசப்பில் விழும்
வார்த்தையில் வருகிறதே
வலியினால் வழி மாறலாம்
வழியினால் வலியும் மாறலாம்
எனவே மனம் மாறாதிருப்போம்
வசை பாடாதிருப்போம்.