உறவுகள்
உறவுகள்
ஒற்றை சொல்லில் அடங்கி இருக்கு
பலவித உறவுகள்
உணர்வுக்கு உயிர் கொடுத்தும்
உயர்ந்திட தோள் கொடுத்தும் , நெருக்கமாய் ,
உருக்கமாய் மழைத்துளி மேவிய மேகக்கூட்டமாய்
அரவணைத்து செல்லும் சொந்தங்கள் , சொந்தங்கள் அல்ல
நான் இருக்கேன் உன்னோடு என்ற
அசரீரி வார்த்தை கொண்டு
சகல வித்தைகளையும் விதைகளாக்கி
பதியமிடும் பாசக்கார உறவுகள்
வருடங்களாய் கட்டிவைத்து காத்ததை விரல் சொடுக்கும் நேரத்தில்
வீழ்த்திவிடாதீர்கள் புரிதல் எனும் பாங்கின்றி