ஜீவன்கொள்ளும் உயிரே💕💕💕
என்னிலும் உன்னிலும் ஜீவன்கொள்ளும் உயிரே..!
என் எத்தனையெத்தனை இரவுகளை இரவல் வாங்கியிருப்பாய்..!
மொத்தமாய் எவ்வளவு ஆனந்தம்..!!
என் மகிழ்ச்சியின் பரிசை உனக்கு குருதியாய் தரவா..?
இல்லை, உன்னை குழந்தையாய் பெறவா..? என் இதயக் கதவுகளை ஓய்வெடுக்காமல் விழிக்கச் செய்தாய்..!
உன் வரவுகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணிக்காக...!
ஆண்டுகள் பன்னிரெண்டைக் கடந்து, பூக்கும் மலர்கூட தன் இதழ்களை உதிர்த்துவிடும்...
நீ, ஒருபோதும் என் மீதான அன்பை உதிர்த்ததில்லை...
என்னிலும் உன்னிலும் இடமாறும் உயிரே..! இப்போதும் எப்போதும் என் வாழ்வில் உன் அன்பு நிகழ்காலந்தான்..!!
வேல் முனியசாமி.