தூரிகை தவறிய ஓவியம்
பிரம்மனின் ஓவிய தீற்றலில்
கை தவறி உதறியதில்
தெறித்து விழுந்த சிறு துளியோ
உன் உதட்டோர மச்சம் இல்லை
அவன் படைப்பின் மீதே அவன் கொண்ட
மோகத்தில் வியர்த்து தெறித்த
வியர்வை துளி காய்ந்து
வண்ணம் மாறியதோ
மெய்யெழுத்தாய் உன் முகத்தில்
பதிந்த மச்சத்தில்
என் தலை எழுத்தும் மாறிப்போனதடி
நீ சம்மதித்தால் நாம் உயிர்மெய்யெழுத்தாய்
உரு மாறிப்போவோமடி