வலிகள்

வலிகள்
விபத்தினால் உண்டாகும் வலி
தீருமே சில நாளில்
வார்த்தையினால் உண்டாவது தீருமோ
கடுகென பொறிவோர் தரும் வலி
தீர்ந்திடும் அந்நேரமே உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும் வித்தகர்கள் தரும் வலி
தீருமோ எந்நாளும்
பொருள் இழப்பு ,உயிர் இழப்பில்
ஏற்படாத காயமும் வலியும்
மாந்தரின் மனக்கசப்பில் விழும்
வார்த்தையில் வருகிறதே
வலியினால் வழி மாறலாம்
வழியினால் வலியும் மாறலாம்
எனவே மனம் மாறாதிருப்போம்
வசை பாடாதிருப்போம்.

எழுதியவர் : vincy (30-Jun-20, 11:10 pm)
சேர்த்தது : vincy
Tanglish : valikal
பார்வை : 94

மேலே