நிதி ஒதுக்கீடு

==============
நதியைத் துப்பரவு செய்ய
நிதி ஒதுக்கியவர்கள் முயற்சிக்கு
அடை மழையின் வெள்ளம்
இடையூறு விளைவித்ததால்
ஒதுக்கிய நிதியை
ஊருக்குத் தெரியாமல்
யாருக்கும் தெரியாமல்
ஒதுக்கியே விட்டார்கள்
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Jul-20, 1:31 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 37

மேலே