மறுமுனை Marumunai

Tamil Cinema Vimarsanam


மறுமுனை marumunai விமர்சனம்
( Vimarsanam)

புதுமுகங்களின் வருகை.,சினிமா துறைக்கு வளர்ச்சி என்று ஒரு புறம் இருக்க...மறுபுறம் கதை அவர்களுக்கு ஏற்ற மாதிரி கொடுத்து இயக்குனர்கள் சிலர் வென்றிருக்கிறார்கள்,பலர் ?...

மறுமுனையில் கதாபாத்திர தேர்வு சரியாக இருந்தாலும் ஏதோ ஒன்று குறைகிறது.

நாயகன் மாருதி பேருந்து நடத்துனர் மகனாக,நடுத்தர குடும்ப இளைஞனாக சிறு தாடியுடன் வருகிறார்.நாயகி மிருதுளா பெரிய வீட்டு பெண்ணாக தன் நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார்.நாயகனுக்கும்,நாயகிக்கும் காதல் மலர்கிறது.

எல்லா படங்களிலும் வரும் கதை போல் தான், தன் தந்தையிடமிருந்து நாயகியின் காதலுக்கு எதிர்ப்பு வருகிறது.இதனால் நாயகனும்,நாயகியும் அடுத்து என்ன செய்கிறார்கள்.

அப்படி முடிவெடுக்கும் போது இருவரில் ஒருவர் கதாபத்திரத்தின், மாறுதல்களை சிறப்பாக படத்தின் ஒரு முனை தெரிவித்துள்ளது.

ராஜேந்திரனும்,ராஜா சிம்மனும் வில்லனாக கலக்கியிருக்கிறார்கள்.

சிம்புவின் குரலில் பாடல் அருமை.மீத பாடல்கள் பரவாயில்லை.

மறுமுனை - திருப்புமுனையல்ல.

இப்படத்தை பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்து பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-04-01 19:00:25
1 (1/1)
Close (X)

மறுமுனை marumunai தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே