கத்தி
Kaththi Tamil Cinema Vimarsanam
(Kaththi Vimarsanam)
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கத்தி.
இப்படத்தில் இரு கதாப்பாத்திரங்களில் விஜயும், விஜய்க்கு காதலியாக சமந்தாவும், பிற முக்கிய கதாப்பாத்திரங்களில் சதீஷ், நீல் நிதின் முகேஷ், தோட ராய் சௌத்ரி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்துள்ளனர்.
சிறை கைதி-கதிரேசன் என்பவராகவும், விவசாய மக்களுக்கு துணை புரியும் ஜீவானந்தம் என்பவராகவும், விஜய் இரு கதாப்பாத்திரங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கொல்கத்தாவில் சிறை கைதியான கதிரேசன், சிறையை விட்டு தப்பிப் பின் சென்னை வந்து தன் நண்பனான சதீசிடம் உதவி கேட்டுப் பின் பாங்காக் செல்ல போகும் போது சமந்தாவை கண்டதும் காதலில் விழுகிறார். அதனால் இன்னொரு நாள் பாங்காக் செல்ல திட்ட மிட்டு, சமந்தாவை தேடி அலைகிறார். இதற்கிடையில் சில ரவுடி கும்பல், ஒருவரை தன் கண் முன்னே சுட, கதிரேசன் சுடப்பட்டவரை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறார். கதிரேசனை போல் இருக்கும் சுடப்பட்டவர் ஜீவானந்தம். ஜீவானந்தம் விவசாயிகளின் தோழன். விவசாயம் மற்றும் சமூக நலனுக்காக போராடிய ஜீவானந்தத்தை மிகப் பெரிய தொழிலதிபரான நீல் நிதின் முகேஷ் அழிக்க நினைத்து ஆள் வைத்து சுடும் நிகழ்வு, கதிரேசன் முன்னிலையில் நடைபெற இந்நிகழ்வு கதிரேசன் வாழ்கையில் பல மாற்றங்கள் ஏற்பட உதவியாக அமைகிறது.
கதிரேசன் வாழ்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? என்பதையும், ஜீவானந்தம் -கதிரேசனால் என்ன ஆனார்? என்பதையும், கதிரேசனின் காதலை சமந்தா ஏற்றாரா? என்பதையும், விவசாயம் பற்றிய செய்தி என்ன? என்பதையும் பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் இப்படத்தில் காணலாம்.
அனிருத் ரவிசந்தர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமை.
கத்தி - கூரிய செய்தி
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.