மான் கராத்தே Maan Karate

Tamil Cinema Vimarsanam


மான் கராத்தே maan karate விமர்சனம்
( Vimarsanam)

இளம் வெற்றி நாயகர்களின் வெற்றி படம் தான் மான் கராத்தே.வெற்றி நாயர்கர்கள் என்று குறிப்பிட்டது இப்படத்தின் நாயகன்,நாயகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், கதையாசிரியர்.

இப்படத்தில் அமைந்த கூட்டணி அருமையானது. இவர்களின் கூட்டணியைப்போல் இப்படமும் அருமை.

நண்பர்களின் கூட்டணி வனத்தை நோக்கி செல்ல அங்கு ஒரு சித்தர் பல வருங்கால உண்மைகளை கூற, அதை சோதிக்கிறார்கள் அதில் சில விஷயங்கள் உண்மையாக நிகழ்கிறது.

நண்பர்களின் கூட்டணியில் ஐந்து பேர்.அதில் சதீஷ், பல புது முகங்கள், பீட்டர் என்பவன் சிவகார்த்திகேயன்.
அந்த சித்தர் என்ன சொன்னார்?அதற்காக நண்பர்கள் கூட்டணி என்ன செய்தார்கள்?என்பதை அருமையாக படமாக்கியுள்ளனர் படக்குழுவினர்.

சிவாவின் நடனம் அவரை மேலும் ஒரு பரிமாணத்துக்கு செல்ல வழிவகை செய்யும் என்பதில் இப்படத்தில் காணலாம்.ஹன்சிகா அழகு பதுமை என்பதை நிரூபிக்கிறார்.

வில்லனாக ஏன் வம்சி கிருஷ்ணா ஏன் வருகிறார்?சூரி என்ன வேடத்தில் வருகிறார்? என்பது சுவாரஸ்யம்.

அனிருத் இசையில் பாடல்கள் அருமை.

மான் கராத்தே -- மானைக் கண்களால் நேரில் காண்பது போல ---ரசனை கதை ----பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

இப்படத்தை பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்து பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-04-04 16:20:11
4.3 (34/8)
Close (X)

மான் கராத்தே maan karate தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே