குக்கூ

Tamil Cinema Vimarsanam


குக்கூ விமர்சனம்
( Vimarsanam)

எளிய மனிதர்களின் காதல் என்ற ஒரு வரிக் கதை முழு நீளப் படமாகியிருக்கிறது. கண் பார்வை இல்லாதவர்களின் வாழ்க்கை, காதல், பாடுகள், தன்னம்பிக்கை என அவர்களின் உலகம்தான் இந்தப் படம்.

நாயகன், நாயகி இருவரும் கண் பார்வை இழந்தவர்கள். சென்னைப் புறநகர் ரயில் நிலையங் களில் வியாபாரம் செய்து பிழைப்பவர் தமிழ் (தினேஷ்). கல்லூரி மாணவி சுதந்திரக்கொடி. (மாளவிகா).

வழக்கம் போலவே மோதலில் ஆரம்பிக் கிறது காதல். தமிழ் சுதந்திரக்கொடியைக் காதலிக்க, சுதந்திரக்கொடியோ கண் பார்வை இருக்கும் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தில் இருக்கிறார். இவர் கள் இருவருக்கும் காதல் வந்ததா, இவர்கள் ஒன்றாக இணைந்தார்களா என்பதுதான் மீதிக்கதை.

சாமானிய மனிதர்களின் வாழ்க்கையை முதல் படத்துக்கான கதைக்களமாக எடுத் துக்கொண்ட ராஜு முருகன் பாராட்டப்பட வேண்டியவர். கதையைத் தேர்ந்தெடுத்தது மட்டுமட்டாமல், கதாபாத்திரங்கள் தேர்வு, வசனங்கள் ஆகியவற்றிலும் ராஜு முருகன் ஆச்சரியப்படுத்துகிறார்.

‘அண்ணா ஹசாரே கூட்டத்துல பார்த் தேன், இன்னிக்கு பேஸ்புக்கல ஏகப்பட்ட லைக் விழும்’ என்று தற்போதைய இளை ஞர்களின் ‘சமூக சேவை’யை முகத்தில் அறைந்தது போல சொல்வது நச்.

தினேஷும் மாளவிகாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்கப் பார்வையற்றவர் களைச் சுற்றியே கதை நகருகிறது. ஆனால் அவர்களது எந்தத் துயரமும் மனதைத் தொடுமளவுக்குக் காட்சிப் படுத்தப்படவில்லை. படத்தின் நீளம் மிக அதிகம்.

குக்கூ ஒரு யதார்த்த சினிமா முயற்சி.


சேர்த்த நாள் : 2014-03-27 18:03:33
4.7 (33/7)
Close (X)

குக்கூ தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே