ஜீவா

Jeeva Tamil Cinema Vimarsanam


ஜீவா விமர்சனம்
(Jeeva Vimarsanam)

இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் இயக்ககத்தில் வெளியாகியுள்ள படம்., ஜீவா.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் விஷ்ணு விஷால், ஸ்ரீ திவ்யா, சூரி, லக்ஷ்மன் நாராயண், சார்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

மட்டைப்பந்து விளையாட்டை மிகவும் விரும்பும் பள்ளி மாணவன் விஷ்ணு, பள்ளிப்பாடங்கள் மனதில் பதியவில்லை. விஷ்ணு பள்ளியில் படிக்கும் மாணவியாக ஸ்ரீ திவ்யா. இருவருக்கும் இடையில் பள்ளி பருவக் காதல் தொடர, இதை அறிந்த ஸ்ரீ திவ்யாவின் பெற்றோர் ஸ்ரீ திவ்யாவை வேறு ஊருக்கு அனுப்பி விடுகின்றனர். விஷ்ணு, ஸ்ரீ திவ்யாவின் பிரிவால் துயரம் தாளாது மது பழக்கத்திற்கு அடிமையாக, விஷ்ணுவின் தந்தை அவனுக்கு பிடித்த மட்டைபந்தில் ஆர்வம் செலுத்த வைக்கிறார்.

லக்ஷ்மன் நாராயண், விஷ்ணுவின் நண்பராக வருகிறார். மூத்த மட்டைப்பந்து விளையாட்டு வீரராக சூரி. லக்ஷ்மன் நாராயண் வந்த பின்பு விஷ்ணுவின் வாழ்கையில் ஏற்படும் மாற்றங்களையும், விறுவிறுப்பான மட்டைப்பந்து போட்டிகளையும், ஸ்ரீ திவ்யாவுடனான காதலில் வெற்றி பெற்றாரா? என்பதையும் இப்படத்தின் மீதிக் கதையில் காணலாம்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-09-26 18:42:32
4.5 (18/4)
Close (X)

ஜீவா (Jeeva) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே