யான்

Yaan Tamil Cinema Vimarsanam


யான் விமர்சனம்
(Yaan Vimarsanam)

இயக்குனர் ரவி கே. சந்திரன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், யான்

இப்படத்தில் அழுத்தமான கதாப்பாத்திரங்களில் ஜீவா, துளசி, நாசர், தம்பி ராமையா, நவாப் ஷா, ஜெயப்பிரகாஷ், கருணாகரன், வெங்கட் போஸ் நடித்துள்ளனர்.

வணிக நிர்வாகப் படிப்பை முடித்து விட்டு வேலை கிடைக்காமல் தன் பாட்டியின் உழைப்பில் மும்பையில் வாழ்ந்து வருகிறார், ஜீவா. ஒரு முறை மகிழுந்து ஓட்டுனர் பள்ளியினை நடத்தி வரும் துளசியை சந்திக்கிறார், ஒரு தலையாக துளசியை காதலித்து வருகிறார். துளசியின் தந்தை நாசர் அருகில் இருப்பதை பாராது தன் காதலை துளசியிடம் சொல்ல,நாசர் அமைதியாக வீட்டில் வந்து பேசுமாறு கூறுகிறார். நாசரின் வீட்டில் பெரிய அவமானதுக்குள்ளாகிறார், ஜீவா.

அவமானத்திற்குப் பின் அவர் எடுத்த முடிவால் ஏற்படும் விளைவுகளையும், துளசி ஜீவாவை காதலித்தாரா? என்பதையும், " நவாப் ஷா, ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, கருணாகரன்" அனைவரின் அழுத்தமான கதாபாத்திரம் என்ன? என்பதையும் இப்படத்தில் காணலாம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. இப்படத்தில் நடித்தவர்களின் கதாப்பாத்திரத்தேர்வு சிறப்பு.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-10-03 13:03:53
1 (1/1)
Close (X)

யான் (Yaan) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே