பூஜை
Poojai Tamil Cinema Vimarsanam
(Poojai Vimarsanam)
இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், பூஜை.
இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் விஷால், சத்யராஜ், சூரி, ஸ்ருதிஹாசன், ராதிகா சரத்குமார், கௌசல்யா, மனோபாலா நடித்துள்ளனர்.
தன் அம்மா சொன்ன வார்த்தையில் வீட்டை விட்டு வெளியேறும் விஷால் தன் நண்பர்களான சூரி மற்றும் பாண்டியுடன், கோவை காந்திபுரம் சந்தையில் வட்டிக்கு விடும் நபராக மாறுகிறார். ஒரு முறை வணிக கூடத்தில் தன் நண்பர்களுடன் மகிழ்ச்சிக்காக சென்ற விஷால், ஸ்ருதியை சிறு பிரச்னை மூலம் சந்திக்க நேர்கிறது. பின்னர் எதர்சையாக சந்திக்கும் இவர்கள் நண்பர்களாக மாறுகின்றனர். இவர்கள் இருவரும் திரையரங்கத்திற்கு செல்கையில் காவல்துறை அதிகாரியான சத்யராஜ் தன் மனைவியுடன் வந்திருந்த போது கூலிப்படை அவரை கொல்லப் போகும்போது விஷால் காப்பாற்றுகிறார். பின்னர் விஷாலின் காதலை ஸ்ருதியிடம் சொல்லும் போது ஸ்ருதி காதலை மறுத்து மனம் புண்படும் படியான பேச்சை பேசி விடுகிறார். கூலிப்படை விஷாலை கண்டு பின் கொல்ல முயற்சிகள் செய்கின்றனர். தன் சொந்த ஊருக்கு சென்ற குடும்பத்தினரையும் கொல்ல முயற்சிகள் செய்கின்றனர்.
விஷால் தன்னையும், தன் குடும்பத்தினரையும் காப்பாற்றினாரா? என்பதையும், கூலிப்படையை வேறோடழித்தாரா? என்பதையும், அவரின் காதல் கைகூடியதா? என்பதையும் இப்படத்தில் காணலாம்.
நகைச்சுவை மற்றும் பாசக் காட்சிகளில் அனைவரின் நடிப்பும் அருமை.
பூஜை - சிறப்பு, பார்க்கலாம் பலமுறை.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.