ஒரு ஊருல ரெண்டு ராஜா

Oru Oorula Rendu Raja Tamil Cinema Vimarsanam


ஒரு ஊருல ரெண்டு ராஜா விமர்சனம்
(Oru Oorula Rendu Raja Vimarsanam)

இயக்குனர் ஆர். கண்ணன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ஒரு ஊருல ரெண்டு ராஜா.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் விமல், சூரி, ப்ரியா ஆனந்த், அனுபமா குமார்,நாசர், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.

சமூக நலனுக்காக போராடும் ஒரு சிறந்த மருத்துவராக ப்ரியா ஆனந்த், ப்ரியா ஆனந்த்தை புகை வண்டியில் ஒரு சந்தர்ப்பத்தில் கண்டு குழம்பும் விமல் சூரியிடம் புலம்புகிறார். ப்ரியா ஆனந்த் மருத்துவர் என்று அறிந்ததும் காதலில் விழுகிறார், விமல். கதை நகைச்சுவையுடன் நகர, ப்ரியா ஆனந்த் சமூக நலனுக்கு போராடும் விஷயத்தையும், தன் தோழி விஷாகா சிங் குறித்த பழைய நிகழ்வையும் விமலிடமும்,சூரியிடமும் பகிர விமலும் சூரியும் நாங்களும் உதவி புரிகிறோம் என்று ப்ரியா ஆனந்த்தின் பகைவர்கள்(நாசர்,அனுபமா குமார்) கொல்ல அனுப்பும் அனைவரிடம் இருந்தும் காப்பாற்றுகின்றனர். ப்ரியா ஆனந்த் சமூக நலனுக்காக போராடியது கைகூடியதா? இல்லை ஏமாற்றம் மிஞ்சியதா?மற்றும் விமலின் காதலை ப்ரியா ஏற்றாரா? என்பதையும் விறுவிறுப்புடன் சுவாரஸ்யமாக இப்படத்தில் காணலாம்.

ஆர் கண்ணன் அவர்கள் சிறந்த சமூகக்கதையை மக்களுக்கு படமாகத் தந்துள்ளார். படத்தின் இசை மற்றும் பாடல்கள் அருமை.

இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-11-07 15:24:06
4 (4/1)
Close (X)

ஒரு ஊருல ரெண்டு ராஜா (Oru Oorula Rendu Raja) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே