நாய்கள் ஜாக்கிரதை

Naaigal Jaakirathai Tamil Cinema Vimarsanam


நாய்கள் ஜாக்கிரதை விமர்சனம்
(Naaigal Jaakirathai Vimarsanam)

இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், நாய்கள் ஜாக்கிரதை.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிபிராஜ், அருந்ததி, மனோபாலா, பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.

காவல்துறை இளைஞனாக சிபிராஜ், இவரின் சிறந்த தோழனாக சுப்பிரமணி என்கிற நாய். மனைவி குடும்பம் என்று மகிழ்ச்சியாக செல்லும் சிபியின் வாழ்கையில் ஒரு திருப்பம் நிகழ்கிறது. கொலைகார கும்பல், சிபியின் மனைவி அருந்ததியை கடத்தி உயிருடன் புதைத்து வைத்துள்ளதாக கூறுகிறது. அருந்ததியை 12 மணி நேரத்திற்குள் காப்பாற்றிக்கொள் என்பதையும், அவளை கொலை செய்வதற்கான காரணத்தையும் அவர்கள் மூலம் அறியும் சிபி அதிர்ச்சியில் உறைகிறார்.

கொலைகார கும்பல் எதற்காக அவ்வாறு செய்தனர்? என்பதையும், சிபி மனைவியை காப்பற்றினாரா? அவர் அதிர்ச்சியில் உறைய காரணம் என்ன? என்பதையும், சுப்ரமணியான நாயின் பங்கு என்ன? என்பதையும் இப்படத்தில் பரபரப்பு கலந்த விறுவிறுப்புடன் காணலாம்.

சிபியும் சுப்ரமணியும் அடிக்கிற கலாட்டா மற்றும் நகைச்சுவை சிறப்பு.

நாய்கள் ஜாக்கிரதை - நாய்களின் நன்றியுணர்வு.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-11-21 18:40:55
4 (4/1)
Close (X)

நாய்கள் ஜாக்கிரதை (Naaigal Jaakirathai) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே