காந்தர்வன் Kaantharvan

Tamil Cinema Vimarsanam


காந்தர்வன் kaantharvan விமர்சனம்
( Vimarsanam)

கரண் – வடிவேலு நடித்த காத்தவராயன் என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர், சலங்கை துரை. இவர் இயக்கிய படம் தான் காந்தர்வன்.

படத்தின் நாயகனாக கதிர், தண்ணி லாரி ஓட்டும் ஒரு ஆதரவற்ற இளைஞர்.அவர் தான் நண்பர்களுடன் தங்கியிருக்கிறார். பிடிவாத குணம் மற்றும் கோபம் மிகுந்தவராக நடிக்க முயன்றிக்கிறார்.

படத்தின் நாயகி ஹனிரோஸ்.வழக்கமான நடிகை கதாபாத்திரம் தான். கஞ்சாகருப்பு இப்படத்தில் படு கஞ்சனாக நடித்திருக்கிறார்.

நாயகனும் நாயகியும் மோதலில் அறிமுகமாகிப் பின் நாயகனின் நற்குணத்தைக் கண்டு காதல் மலர்கிறது நாயகிக்கு, நாயகனும் காதல் வயப்படுகிறான்.ஒரு நாள் நாயகனைப் பற்றி தந்தை ஒரு விசயத்தைக்கூற நாயகி மன வேதனை அடைந்து என்ன செய்கிறாள்? என்பதையும், தந்தை என்ன கூறினார்? என்பதையும் இப்படத்தில் காணலாம்.

அலெக்ஸ் பால் இசையில் பாடல்கள் பரவாயில்லை.ஒரு பாடல் மட்டும் ரசிக்கும் வகையில் உள்ளது.

காந்தர்வன் - காந்தம் போல் ஈர்க்கவில்லை

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-04-15 17:03:47
3 (3/1)
Close (X)

காந்தர்வன் kaantharvan தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே