ஆஹா கல்யாணம்

Tamil Cinema Vimarsanam


ஆஹா கல்யாணம் விமர்சனம்
( Vimarsanam)

இந்தியில் மாபெரும் வெற்றிப் பெற்ற \'பேண்ட் பாஜா பராட்\' (Band Baaja Baaraat) படத்தின் ரீமேக் தான் இந்த \'ஆஹா கல்யாணம்\'.

படத்தின் கதைப்படி கல்லூரி படிப்பை முடித்ததும் சொந்தமாக வெட்டிங் பிளானிங் தொடங்க நினைக்கும் வாணி கபூர், ‘கெட்டிமேளம்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார். இதில் பார்ட்னர் என்ற பெயரில் வந்து சேர்கிறார் நானி. முதலில் ஒரு சின்ன திருமணத்தில் ஆரம்பிக்கும் இவர்கள் இருவரும் படிப்படியாக நிறைய திருமணங்களை நடத்தி முன்னுக்கு வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு மிகப்பெரிய திருமணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு பார்ட்டி கொண்டாடும் நாணியும், வாணியும் போதையில் எல்லை மீற, நாயகி வாணி கபூரை 5 முறை லிப் லாக் செய்கிறார் நானி. அதன்பின் வாணிக்கு நானி மீது இருக்கும் காதல் புரிகிறது. நானியிடம் காதலைச் சொல்ல வரும்போது, ஒரு தவறான புரிதலால் இருவருக்கும் உள்ள ஈகோவால் பிரிகிறார்கள். அதன்பின் ‘கெட்டி மேளம்’ என்னானது, நானி-வாணி காதல் என்னானது என்பது மீதிக்கதை?

படம் முழுக்க கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு, மனதில் மெதுவாக இசைந்துக்கொண்டே இருக்கும் பின்னணி இசையும், பாடல்களும் ப்ளஸ். தரணின் இசையில் தல பாடலும், மழையின் சாரலும் ரசிக்க வைக்கிறது.

ஆஹா கல்யாணம் - புதுமுயற்ச்சியின் வெற்றி


சேர்த்த நாள் : 2014-03-27 17:58:50
2.5 (5/2)
Close (X)

ஆஹா கல்யாணம் தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே