பூலோகம்
Bhooloham Tamil Cinema Vimarsanam
(Bhooloham Vimarsanam)
சென்னையில் 1948-ல் இருந்து இரண்டு ஏரியாக்களுக்கிடையே பாக்சிங் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜெயம் ரவி சிறுவயதில் இருக்கும்போது அவருடைய அப்பா, எதிராளியுடன் பாக்சிங்கில் போட்டியிருக்கிறார்.
இதில் தோற்கும் ஜெயம்ரவியின் அப்பா, அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் ஜெயம்ரவி சிறு வயதில் இருந்தே பெரிய பாக்சராகி எதிராளியின் மகனை தோற்கடித்து பழியை தீர்க்க வேண்டும் என்ற கொள்கையோடு வளர்கிறார்.
இந்நிலையில், டிவி சேனல் நடத்தி வரும் பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவியின் வெறியை வைத்து பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார்.
ஜெயம் ரவிக்கும் எதிராளிக்கும் இடையே பெரும் போட்டியை ஏற்பாடு செய்கிறார். இதற்காக ஜெயம் ரவியுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்.
இந்த போட்டியில் ஜெயம் ரவி வெற்றி பெறுகிறார். இந்த போட்டியின்போது தன்னால் தாக்கப்பட்ட எதிராளி, உயிர்போகும் நிலைக்கு ஆளாவதைக் கண்டு மனம் இறங்குகிறார் ஜெயம் ரவி. இதனால், இனி பாக்சிங் வேண்டாம் என்று முடிவுக்கு வருகிறார். மேலும் எதிராளியை காப்பாற்றும் முயற்சியிலும் ஜெயம் ரவி ஈடுபடுகிறார்.
ஜெயம் ரவியை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்திருக்கும் பிரகாஷ் ராஜ் இதனை அறிந்து அவரை மீண்டும் பாக்சிங்கில் ஈடுபடுத்த பல சதி வேலைகளை செய்கிறார். இறுதியில் பிரகாஷின் சதி திட்டத்தை ஜெயம்ரவி அறிந்துக் கொண்டாரா? மீண்டும் பாக்சிங்கில் ஜெயம் ரவி ஈடுபட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.