டார்ஜன்
Taarjan Tamil Cinema Vimarsanam
(Taarjan Vimarsanam)
முப்பரிமாண அசைவூட்ட படம் தான் டார்ஜன்.
இப்படத்தின் கதாநாயகனாக கெலன் க்லட்ஜ் - டார்ஜனாகவும், கதாநாயகியாக ஸ்பென்சர் லோக்கே-ஜெய்னாகவும் அசைவூட்ட படத்தில் நடித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளரான கிரேஸ்ட்ரோக் அதிக சக்திவாய்ந்த எரி நட்சத்திரத்தை தேடி தனது மகன் மற்றும் மனைவியுடன் ஒரு மலைக்கு பயணமாகிறார். அங்கு அவர் எரிமலையில் பகுதியை உடைக்கிறார். அதனால் அந்த எரிமலை வெடித்து சிதற, அங்கிருந்து தப்பித்து ஹெலிகாப்டரில் ஏறி பயணமாகும்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிறது.
அந்த விபத்தில் கிரேஸ்ட்ரோக் மற்றும் அவரது மனைவி இறந்துபோக, அவரது மகன் மட்டும் நடுக்காட்டுக்குள் தவிக்கிறான். அவனை மனிதக் குரங்கு எடுத்து வளர்க்கிறது. காட்டில் வன உயிரிகளுடன் வளர்கையில், அவ்வுயிரிகள் மூலம் ஒவ்வொரு நுட்பங்களையும் அறிந்து கொள்கிறான்.
அந்த காட்டுக்கே ராஜாவாக உருவெடுக்கிறான். ஒருநாள் இவன் வசிக்கும் காட்டுக்கு நாயகியான ஜெயின் தனது தந்தை மற்றும் நண்பர்களுடன் அக்காட்டை சுற்றிப் பார்க்க வருகிறாள். அங்கே ஒரு ராட்சத பறவையிடம் மாட்டிக்கொள்ளும் ஜெயினைக் காப்பாற்றி, சிகிச்சை கொடுக்கிறான் டார்ஜன்.
இதனால் ஜெயினுக்கும், டார்ஜனுக்கும் இடையில் ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படுகிறது. குணமாகியவுடன் காட்டில் உள்ள தனது இருப்பிடம் திரும்பிய ஜெயினை, நீண்ட நாள் காணாமல் ஏங்கிக் கிடக்கிறான்,டார்ஜன்.
இந்நிலையில், இவன் சிறு வயதில் வந்த ஹெலிகாப்டரை ஆராய்ந்து, தான் யார் என்பதை உணர்கிறான்.
கிளெண்டன் என்னும் வில்லன், எரி நட்சத்திரத்தை தேடி வருகிறான்.
கிளெண்டன் வருகையால் டார்ஜன், ஜெயின் மற்றும் வன உயிரிகள் நிலைமை எவ்வாறு தலைகீழாகிறது? என்பதையும், அந்நிலைமையிலிருந்து மீண்டார்களா? என்பதையும் விறுவிறுப்புப்போடு படத்தில் காணலாம்.
டார்ஜான் - அதிக சக்தியுள்ள கட்டின் ராஜா.