என்னமோ ஏதோ
Yennamo Yetho Tamil Cinema Vimarsanam
(Yennamo Yetho Vimarsanam)
காதல் கதையை வைத்து சிறப்பான திருப்பங்களுடன், அறிமுக இயக்குனரான ரவி தியாகராஜன் இயக்கி இருக்கும் படம் தான், என்னமோ ஏதோ.
கௌதம் கார்த்திக் அழகான சாக்லேட் இளைஞனாக நடிப்பில் ஒரு படி முன்னேறியிருக்கிறார்.புது முக நாயகி ரகுல் மற்றும் நிகிஷா நடிப்பும் நன்று. கதையின் வலுவாகவும் , கௌதமின் அப்பாவாகவும் பிரபு நடித்திருக்கிறார். மனோபாலா எப்போதும் போல நல்ல கதாபாத்திரத்தை தேர்தேடுத்துள்ளார். எல்லோருக்கும் இந்த மாதிரி அம்மா கிடைக்கமாட்டர்களா? என்று நினைக்க வைக்கும் அம்மாவாக அனுபமா குமார்.
கெளதமின் ஒரு காதலில் தோற்க ஒருவழியில் காரணமாகும் ரகுல், அதை பொருட்படுத்தாது கெளதம் ரகுலிடம் நட்பு வைக்கிறார்.நட்பு காதலாக மலர்கிறது.இக்காதலை சொல்ல தடையாக இருக்கும் ரகுலின் திருமணம், என்று பல திருப்பங்கள் இருப்பதால் படம் சுவாரஸ்யமாக நகர்கிறது.நல்ல பொழுதுபோக்கு படம்.
இமானின் இசையில் பாடல்கள் அருமை.
என்னமோ ஏதோ - காதலால் மனதில் நடக்கும் நிகழ்வுகள்.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பதிவு செய்யவும்.