ஆதி தப்பு

Aathi Thappu Tamil Cinema Vimarsanam


ஆதி தப்பு விமர்சனம்
(Aathi Thappu Vimarsanam)

தமிழர்களின் கலைகளில் தப்பட்டம் என்ற கலை, ஆடதவர்களையும் ஆடவைக்கும் கலை. அக்கலையை தலைமுறைகள் கடந்தும் அதை ஒரு நல்ல கலையாகப் பேணிக்காக்கவும், அக்கலைக்கு தேவையான முக்கிய இசைக்கருவியை ஒரு நல்ல இசைக்கருவியாக அங்கீகரிக்கத் தவறிவிட்டோம் என்பதையும், தப்படித்து வாழ்பவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்தும் இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் சி.கே.கருணாநிதி.

படத்தின் கதாநாயகனாக சந்தோஷ் குமாரும், நாயகியாக யுவலரசினி ராய்யும் சிறப்பாக நடித்துள்ளனர்.

கிராமங்களில் தப்பு அடிக்கும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் வாழ்க்கையைப் பற்றிய படமாக இருக்கிறது.

"சில தொழில்களுக்கான சமூக மரியாதை இன்னும் ஏற்படவில்லை. சமத்துவம், சகோதரத்துவம், என தெருவுக்குத் தெரு பேசிக்கொண்டிருந்தாலும் சாதி ரீதியான தொழில்கலைஞர்களாகவே இன்னும் சிலர் பார்க்கப்படுகின்றனர். ஆதிமனிதன் விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தயாரித்த இசைக்கருவி தான் 'தப்பு' என்பார்கள். இன்று அந்த தப்புக்கருவிக்கான சமூக அங்கீகாரம் என்பது தாழ்ந்ததாகவே உள்ளது" என்ற நல்ல கருத்தை மையமாக கொண்ட படம்.

ஆதி தப்பு - தமிழர்கள் கண்டு கைகளால் ஆயிரம் முறை (தப்பைத்) தட்டலாம்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-05-02 17:40:40
1 (1/1)
Close (X)

ஆதி தப்பு (Aathi Thappu) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே