வெற்றிச்செல்வன்

Vetri Selvan Tamil Cinema Vimarsanam


வெற்றிச்செல்வன் விமர்சனம்
(Vetri Selvan Vimarsanam)

அறிமுக இயக்குனர் ருத்ரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், வெற்றிச்செல்வன்.

முக்கிய வேடத்தில் அஜ்மல், செரிப், மனோ மற்றும் ராதிகா ஆப்தே நடித்துள்ளனர்.

அஜ்மல், செரிப், மனோ ஆகிய மூவரும் மன நல காப்பகத்தில் இருந்து தப்பித்து ஊட்டிக்கு வர, ஊட்டியில் கஞ்சா கருப்பை நண்பராக பிடிக்கின்றனர். இதனால் கஞ்சா கருப்பு, அவர் வேலை செய்யும் கம்பனியில் அம்மூவரையும் வேலைக்கு சேர்த்து விடுகிறார். வக்கீலாக இருக்கும் ராதிகா ஆப்தேவுடன், அஜ்மலுக்கு பழக்கம் ஏற்பட்டு பின்பு காதலாக மலர்கிறது.

அஜ்மல், செரிப், மனோ ஆகியோர் உதவி செய்யும் நிகழ்வு, அந்நிகழ்வே அவர்களுக்கு பேராபத்தை உருவாக்குகிறது. அப்பேராபத்து என்ன? என்பதையும், எதற்காக காப்பகத்தில் இருந்து தப்பித்தார்கள்? என்பதையும், இவர்கள் மனநல காப்பகத்தில் இருந்ததை அறிந்த ராதிகா ஆப்தே அஜ்மலுடனான காதலை தொடர்ந்தாரா? என்பதையும் இப்படத்தில் காணலாம்.

மணி ஷர்மாவின் இசையில் பாடல்கள் நன்று. முக்கிய வேடங்களில் நடித்திருப்பவர்கள் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர்.

வெற்றிச்செல்வன் - வெற்றி

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-06-20 15:17:28
4 (4/1)
Close (X)

வெற்றிச்செல்வன் (Vetri Selvan) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே