சைவம்

Saivam Tamil Cinema Vimarsanam


சைவம் விமர்சனம்
(Saivam Vimarsanam)

இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், சைவம்.

இப்படத்தின் முக்கிய வேடங்களில் நாசர், பாஷா மற்றும் தெய்வத்திருமகள் பேபி சாரா ஆகியோரும், பாஷாவிற்கு ஜோடியாக துவாரா தேசாயும் நடித்துள்ளனர்.

நாசர் குடும்பம்,கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். சுபகாரியங்களுக்காக சொந்தங்கள் கூடும் போது நாசர், தாத்தாவாக நடித்துள்ளார்.நாசரின் பேத்தியாக சாரா நடித்துள்ளார். சாரா, தனது வீட்டில் வளரும் உயிரினங்களுக்கு பெயர் சூட்டி நண்பர்களாக வளர்த்து வருகிறார். அதில் அவளுக்கு பிடித்த உயிரினம், பாப்பா என்ற சேவல். அந்த சேவலை அவ்வூரில் உள்ளவர்கள் சாமிக்காக பலியிட வைத்திருந்தனர். சேவலை சாரா, சரவணனிடமிருந்து காக்கும் காட்சிகள் அருமை. பலியிட நினைப்பவர்களிடமிருந்து சாரா அச்சேவலை காப்பாற்றினாரா? என்பதையும், பாஷாவின் கிராமத்து காதல் கைகூடியதா? என்பதையும் இப்படத்தில் காணலாம்.

பேத்திக்கும் தத்தாவிற்குமான அன்பை அழகாக காணலாம். குடும்பத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் நம்மை அக்குடும்பத்தில் ஒருவராக நினைக்கவைக்கிறது.

ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் அருமை.

இப்படத்தைப்பார்த்த எழுத்து உறுப்பினர்கள் இப்படத்தைப் பற்றிய தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-06-27 14:25:25
3 (3/1)
Close (X)

சைவம் (Saivam) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே