நெடுஞ்சாலை Nedunjalai

Tamil Cinema Vimarsanam


நெடுஞ்சாலை Nedunjalai விமர்சனம்
( Vimarsanam)

1980ம் ஆண்டுகளில் நெடுஞ்சாலையில் நடந்த உண்மை சம்பவத்தை திரைக்கு ஏற்றார் போல் கட்சிதமாய்,அருமையான காதலை கலந்து படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் கிருஷ்ணா.

இயக்குனர் கிருஷ்ணா,சில்லுனு ஒரு காதலுக்கு பின் நேர்த்தியான சிறப்பான காதல் கதையை விறுவிறுப்பாக கூறியுள்ளார்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆரி,ஓடும் லாரிகளை விரட்டி சென்று திருடும் காட்சிகளில் திறமையாகவும்,சிறப்பாகவும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

படம் முழுவதும் பாவாடை சட்டையில் உலா வரும் ஷிவாதா நாயர்,மிக அழகாக பெண்களுக்கு உரித்தான செயல்களில் மனதை கவர்ந்து,அனைத்து ஆண்களையும் தன் மீது காதல் கொள்ள வைத்திருக்கிறார்.

படத்தில் சலீம் குமார், தம்பி ராமையா, பிரசாந்த் நாராயண், கண்ணன் பொன்னையா ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

பரபரப்பான சிறப்பான படம்.,

படத்தை பார்த்த எழுத்து உறுப்பினர்கள், தங்கள் விமர்சனத்தை கருத்து பகுதியில் பதிவு செய்யவும்.,


சேர்த்த நாள் : 2014-03-29 16:00:02
2 (2/1)
Close (X)

நெடுஞ்சாலை Nedunjalai தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே