அரிமா நம்பி
Arima Nambi Tamil Cinema Vimarsanam
(Arima Nambi Vimarsanam)
ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், அரிமா நம்பி.
இப்படத்தின் கதாநாயகனாக விக்ரம் பிரபுவும், கதாநாயகியாக பிரியா ஆனந்தும் நடித்துள்ளனர்.
ஒரு நாள் பழகிய நகர்புற பெண் பிரியா ஆனந்திற்காக பரபரப்பான வாழ்க்கையை ருசிக்கிறார் விக்ரம் பிரபு. அந்த பரபரப்பு வாழ்க்கை மென் மேலும் தொடர்ந்ததா? இல்லை, விக்ரம் பிரபு தனது வீரத்தாலும்,அறிவாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து வாழ்கையை ஒரு நாள் பழகியவளுடன் இன்பமாக கழித்தாரா? என்பதை இப்படத்தில் காணலாம்.
பட முதலில் ஆரம்பித்த விறுவிறுப்பும் பரபரப்பும் பட இறுதியில் சிறப்பாக முடிந்தது.
சிவமணியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை.
பரபரப்பை விரும்பும் உள்ளங்களுக்கு இப்படம் நல்ல விருந்து.
அரிமா நம்பி - அரிமாவை பார்க்கலாம்.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.