திருமணம் எனும் நிக்காஹ்

Thirumanam Enum Nikkah Tamil Cinema Vimarsanam


திருமணம் எனும் நிக்காஹ் விமர்சனம்
(Thirumanam Enum Nikkah Vimarsanam)

அறிமுக இயக்குனர் அனீஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், திருமணம் எனும் நிக்காஹ்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஜெய், ஜமால், தினேஷ், நஸ்ரியா நசீம் மற்றும் ஹீபாஹ் படேல் நடித்துள்ளனர்.

பட சுவரோட்டியைக்கொண்டு கதையை யூகித்தால் அக்கதை போல் இல்லை. படத்தின் கதைக்கும் சுவரொட்டிக்கும் சிறு சம்மந்தம் தான் உள்ளது. படம் எதிர்ப்பார்த்த அளவில் இல்லை.

ஜெய் விஜய ராகவாச்சாரியாக,அபுபக்கர் எனும் பெயரில் விரைவில் ஊருக்கு செல்ல வேண்டிய காரணத்தால் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கட்டை வாங்கி ரயிலில் பயணிக்கிறான்.அப்போது ஆயிஷா எனும் தேவதையின் தரிசனம் கிடைக்கிறது.இருவருக்கும் இடையில் தொடங்கும் நட்பு மெல்ல காதலாய் மலர்கிறது. நஸ்ரியா ஆயிஷாவாக அசல் பெயர் விஷ்ணுப்ரியா. ஒரு கட்டத்தில் உண்மை அறிய வர இருவரும் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்?என்பதையும்,உண்மையை ஏற்று பின் காதல் மலர்ந்ததா?என்பதையும், ஜெய் இஸ்லாமியனாக நடித்த இடத்தில் என்ன ஆனது? என்பதையும் இப்படத்தில் காணலாம்.

எம். ஜிப்ரான் இசையில் பாடல்கள் அருமை. ஜெய் மற்றும் நஸ்ரியா நசீம் நடிப்பு இயல்பு.

திருமணம் எனும் நிக்காஹ் - திருமண மகிழ்ச்சி இல்லை.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-07-25 14:18:19
4.5 (9/2)
Close (X)

திருமணம் எனும் நிக்காஹ் (Thirumanam Enum Nikkah) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே