கதை திரைக்கதை வசனம் இயக்கம்

Kathai Thiraikathai Vasanam Iyakkam Tamil Cinema Vimarsanam


கதை திரைக்கதை வசனம் இயக்கம் விமர்சனம்
(Kathai Thiraikathai Vasanam Iyakkam Vimarsanam)

இயக்குனர் ஆர். பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகிவுள்ள படம், கதை திரைகதை வசனம் இயக்கம்.

இப்படத்தில் பல புது முகங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். கதாநாயகனாக சந்தோஷ் பிரதாபும், கதாநாயகியாக அகிலா கிஷோரும் நடித்துள்ளனர்.

சிறப்பு கதாநாயகர்களாக விஷால், ஆர்யா, ராகவா லாரென்ஸ், ஸ்ரீகாந்த்,பரத், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், தனுஷ், விமல்,சாந்தனு பாக்யராஜ்,டாப்சீ பண்ணு,அமலா பால், சேரன், தனன்ஜயன் கோவிந்த்,இனியா,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்தது.

தம்பி ராமையாவின் கதாபாத்திரம் அருமை.படத்தில் நடித்த அனைவரும் தங்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

திரைப்படத்துறையில் மிளிர நினைக்கும் இளைஞன் சந்தோஷ்,இவரின் சம்பாதிக்கும் மனைவியாக அகிலா கிஷோர்.தன்னுடைய நண்பர்களுக்கு வீட்டில் விருந்து வைத்து கதைக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதால் சந்தோஷுக்கும் அகிலாவுக்கும் அடிக்கடி சண்டை நிகழ்கிறது.ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைக்க அந்நேரத்தில் சில கருத்து வேறுபாடுகளால் மனைவியை விட்டு பிரிய நேரிடுகிறது.இருப்பினும் தன் கதையை அந்த தயாரிப்பாளருடன் தொடந்தாரா?மனைவியுடன் மறுபடியும் தன் வாழ்கையை கழித்தாரா? என்பதையும், இப்படத்தின் நடுவே வரும் சிறப்பு நடிகர்களின் கதாபாத்திரம் என்ன என்பதையும் இப்படத்தின் கதையில் காணலாம்.

நீண்ட இடைவெளிக்குப்பின் தன்னுடைய அருமையான படைப்பை சரியான காலத்தில் மக்களுக்கு தந்துள்ளார், ஆர். பார்த்திபன்.

வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படத்தை பார்த்து ரசிக்கலாம். திருப்பங்களும் நகைச்சுவையும் மேலும் படத்தை மறுமுறை பார்க்க தூண்டுகிறது.

கதை திரைகதை வசனம் இயக்கம் - எதிர்பார்ப்புக்கு கிடைத்த வெற்றி.

இப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-08-14 19:36:02
4 (4/1)
Close (X)

கதை திரைக்கதை வசனம் இயக்கம் (Kathai Thiraikathai Vasanam Iyakkam) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே