ஐந்தாம் தலைமுறை சித்த வைத்ய சிகாமணி
Aindhaam Thalaimurai Sidha Vaidhiya Sigamani Tamil Cinema Vimarsanam
(Aindhaam Thalaimurai Sidha Vaidhiya Sigamani Vimarsanam)
எல்.ஜி.ரவிசந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்ய சிகாமணி.
இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பரத், நந்திதா, தம்பி ராமைய்யா, கருணாகரன், மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
பரத் படிக்காத சித்த வைத்யராக நடித்துள்ளார். நந்திதா கல்லூரியில் பயிலும் பெண்ணாகவும், பரத்துக்கு மனைவியாகவும் நடித்துள்ளார். தம்பி ராமையா நந்திதாவின் அப்பாவாக நடித்துள்ளார்.
பரத் மருத்துவ பிரிவு ஏதும் பயிலாமல் தன் பரம்பரை தொழிலான சித்த வைத்யதை கையிலெடுக்க, போலி மருத்துவராக இருக்கிறார். தன் பெற்றோர் அறிவுரைகிணங்க படித்த பெண்ணை கை பிடிக்க எண்ணி ஒரு கல்லூரிக்கு வெளியே நின்று மாணவியான நந்திதாவை பார்த்த முதல் பார்வையில் காதலில் விழுகிறார், நந்திதாவும் பரத் மருத்துவர் என காதலித்து தன் குடும்பத்தாரின் ஆசிர்வாதத்துடன் பரத்தை கைப்பிடிக்க, காதல் அழகாய் துளிர்விடும் சமயத்தில் பரத்தை பற்றிய உண்மை நந்திதாவுக்கும் அவரின் குடும்பத்திற்கும் தெரிய வர பரத்தின் நிலைமை மற்றும் திருமண வாழ்க்கை என்ன ஆனது என்பதை படத்தில் காணலாம்?
தம்பி ராமைய்யா, கருணாகரன், மயில்சாமி, சிங்கம் புலி, படவா கோபி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாப், சாம்ஸ், இமான் அண்ணாச்சி ஆகியோரின் நகைச்சுவை கலாட்டா அருமை. பாடல்களும் பரவாயில்லை.
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்ய சிகாமணி - தலைமுறை நகைச்சுவை - பார்க்கலாம் பலமுறை
இப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.