மேகா
Megha Tamil Cinema Vimarsanam
(Megha Vimarsanam)
இயக்குனர் கார்த்திக் ரிஷி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., மேகா.
இப்படத்தில் முக்கிய வேடங்களில் அஷ்வின் ககுமனு, ஜெயப்ரகாஷ், ஸ்ருஷ்டி, அங்கனா ராய் நடித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரியான விஜயகுமாரிடம் ஓட்டுனராக வேலைப்பார்பவரின் மகனாகவும், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் புகைப்பட நிபுணராக வேலைப் புரிபவராகவும் அஷ்வின் ககுமனு.ஒரு நாள் மழையில் பேருந்து நிலையத்தில் நிற்கும் ஸ்ருஷ்டியைப் பார்த்து காதல் வயப்படுகிறார்.பின் ஸ்ருஷ்டியின் இரண்டாம் அண்ணணின் திருமணத்தில் ஸ்ருஷ்டியின் குடும்பத்தில் உள்ள அனைவரின் மனதைத் தொடும் ஒரு நிகழ்வை நிகழ்த்துகிறார்.பின் காதல் மேலும் தொடர்கிறது.
காவல்துறை அதிகாரியான விஜயகுமாரின் உதவியால் தடவியல் துறையில் அஷ்வினுக்கு வேலை கிடைக்கிறது. பின் காவல்துறை அதிகாரியான விஜயகுமார் தற்கொலை செய்ததாக வரும் செய்தியை தவறு என்று நிரூபிக்க அஷ்வின் திரட்டும் தகவல்களால் வரும் ஆபத்தையும், அதன் தாக்கத்தையும் விறுவிறுப்பாக இப்படத்தில் காணலாம்.
இப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.