பொறியாளன்

Poriyaalan Tamil Cinema Vimarsanam


பொறியாளன் விமர்சனம்
(Poriyaalan Vimarsanam)

இயக்குனர் தாணுகுமார் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், பொறியாளன்.

இப்படத்தில் புதுமுக கதாநாயகனாக ஹரிஷ் கல்யாணும், புதுமுக கதாநாயகியாக ஆனந்தியும் நடித்துள்ளனர்.

ஒரு கட்டுமான நிறுவனத்தை உருவாக நினைக்கும் சரவணன்(ஹரிஷ் கல்யாண்) ஒரு கட்டுமான பொறியாளர். தன்னுடைய நண்பனின் உதவியால் கந்துவட்டி வாங்கிப் பின், ஒரு தரகரின் மூலம் நிலத்தை வாங்குகிறார். நண்பன் பிரபுவின் தங்கை(ஆனந்தி)யும் சரவணனும் காதலில் மூழ்கி மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில், அதிர்ச்சி.., கட்டுமான பணி நடக்கும் நிலத்தின் ஆதாரங்கள் போலியானவை என்று தெரிய வர, கந்து வட்டி கடன் கொடுத்த பெரிய தாதா சரவணனைப் பின் தொடர விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நகர்கிறது.

தனக்கு வந்த இடையூறுகளை களைந்து தாதாக்களை சமாளித்து வாழ்க்கையிலும், காதலிலும் சரவணன் வெற்றி அடைந்தாரா? என்பதையும், வீடு, நில உடைமைகள் வணிகத்தின் இருண்ட பக்கத்தையும், கந்து வட்டி கொடுமையின் தாக்கத்தையும் இப்படத்தில் காணலாம்.

பொறியாளன் - பார்க்கலாம்...!

இப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-09-06 13:11:19
2 (2/1)
Close (X)

பொறியாளன் (Poriyaalan) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே