வானவராயன் வல்லவராயன்
Vanavarayan Vallavarayan Tamil Cinema Vimarsanam
(Vanavarayan Vallavarayan Vimarsanam)
இயக்குனர் ராஜமோகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்.,வானவராயன் வல்லவராயன்.
முக்கிய வேடங்களில் தம்பி ராமையா,கிருஷ்ணா குலசேகரன்,மா கா பா, மோனல் கஜ்ஜர்,நிஹரிக்க கரீர்,கோவை சரளா ஆகியோர் நடித்துள்ளனர்.
பொள்ளாச்சிக்கு அருகே வசதியான குடும்பத்து சகோதரர்களாக வானவராயன் (கிருஷ்ணா), வல்லவராயன் (மா கா பாஆனந்த்). வானவராயனுக்கு பெரியவர்கள் பார்க்கும் திருமண சம்பந்தம் அனைத்தும் கைகூடாமல் போக வானவராயனும், வல்லவராயனும் பெண் பார்க்கும் வேளையில் ஈடுபடுகிறார்கள். வானவராயன், பேருந்தில் வந்த பெண் அஞ்சலியைப் (மோனல் கஜ்ஜார்) பார்த்து காதலில் விழுகிறார். நாளடைவில் அஞ்சலியும் வானவராயனைக் காதலிக்க, இதற்க்கு துணையாக வல்லவராயன்.
இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிய வர பெரிய பிரச்சினையாகிறது. ஓடிப் போக முயற்சிக்கையில் அது தோல்வியில் முடிய, வானவராயனை அஞ்சலியின் உறவினர்கள் தாக்குகிறார்கள், வல்லவராயன் இந்நிகழ்வுக்கு பதிலடி கொடுத்த விதத்தில், வானவராயன் அடையும் கோபம் அதனால் வரும் பாசக் நிகழ்வுகளை இப்படத்தில் காணலாம்.
கிருஷ்ணாவும் ம.க.ப. ஆனந்தும் பொருத்தமான அண்ணன் - தம்பி கதாப்பாத்திரத் தேர்வு. நகைச்சுவைக்காகப் பார்க்கலாம்.
வானவராயன் வல்லவராயன் - பாசப் பறவைகள்.
இப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.