சிகரம் தொடு

Sigaram Thodu Tamil Cinema Vimarsanam


சிகரம் தொடு விமர்சனம்
(Sigaram Thodu Vimarsanam)

இயக்குனர் கௌரவ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், சிகரம் தொடு.

முக்கிய வேடங்களில் விக்ரம் பிரபு, சத்யராஜ், கே. எஸ். ரவிக்குமார், சதீஷ், மோனல் கஜ்ஜார், கோவை சரளா ஆகியோர் அவர்களின் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர்.

போலீஸ் வேலையை வெறுக்கும் இளைஞனாக முரளி பாண்டியன் (விக்ரம் பிரபு), போலீஸ் வேலையை வெறுக்கும் டாக்டர் அம்புஜ(மோனல் கஜ்ஜார்)த்தை காண்கிறார், காதலில் விழுகிறார். நாளடைவில் அம்புஜமும் முரளியை காதலிக்கிறார். தன் அப்பா சத்யராஜின் சொல்லிற்கிணங்க விருப்பமில்லாமல் போலிசாகிறார். பணம் எடுக்கும் இயந்திரத்தில் பணம் திருடும் கொள்ளையர்களை பிடித்து காவலில் வைத்து, காதலியுடன் படத்திற்கு செல்கிறார் முரளி. பின் அங்கு மகனைப்பார்க்க வந்த சத்யராஜ் அவர்களை கம்பீரத்துடன் தடுக்க முயல, அவர்களோ சத்யராஜை சுட்டுவிட்டு சென்றனர். முரளி, இந்நிகழ்வுக்குப்பின் செய்த செயல்களை பரபரப்புடன் இப்படத்தில் காணலாம்.

விக்ரம் பிரபுவின் நடிப்பு, சிறப்பு. சத்யராஜின் நடிப்பு நம்மையும் படத்தின் ஒரு அங்கமாக்க வைக்கிறது.

சிகரம் தொடு - சிகரத்தைத் தொட்டுப் பார்க்கலாம்.

இப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-09-17 17:01:47
5 (5/1)
Close (X)

சிகரம் தொடு (Sigaram Thodu) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே