ரெட்ட வாலு
Retta Vaalu Tamil Cinema Vimarsanam
(Retta Vaalu Vimarsanam)
இயக்குனர் தேசிகா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ரெட்ட வாலு.
இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் அகில் பாரூக் , சரண்யா, தம்பி ராமையா,கோவை சரளா ஆகியோர் நடித்துள்ளனர்.
திருடனான அகில் காவலில் இருந்து தப்பித்து செல்கையில், ஒரு இடத்தில ஜோஸ் மல்லூரியை காப்பாற்றி அவருடன் அவர் ஊருக்கு செல்கிறார். அவ்வூரில் ஜோஸ் மல்லூரியின் எதிரியாக தம்பி ராமையா. தம்பி ராமையாவின் மகளாக சரண்யா. அகிலை பார்த்து காதல் வயப்படுகிறார் சரண்யா. சரண்யாவின் காதலை ஏற்க மறுக்க,பின் அவள் செய்வேன் என்று கூறும் மிரட்டல்களால் காதலை ஏற்கிறார், அகில். இதை அறிந்த ஜோஸ் மல்லூரி அகிலிடம் இவ்வூரை விட்டு போய் விடு என்று கூற அகிலும் ஊரை விட்டு போகிறார், ஜோஸ் மல்லூரியை வெறுப்பேற்ற தம்பி ராமையா அகிலை அழைத்து அடைக்கலம் தருகிறார். தம்பி ராமையாவிற்கு மகளின் காதல் தெரியாது. அகில் அவ்வூரில் காதல் செய்து மகிழ்ச்சியுடன் சுற்ற, ஒரு நாள் காவல்துறை அதிகாரிகள் அவனைத்தேடி அவனுக்கு அடைக்கலம் கொடுத்த தம்பி ராமையாவை பிடித்து செல்கின்றனர்.
இந்நிலைக்கு அகில் என்ன செய்தான்? என்பதையும், திருடன் என்ற உண்மையை அறிந்த சரண்யா மேலும் அகிலை விரும்பினாரா?என்பதையும், அகிலின் நிலை என்ன? என்பதையும் பற்றியும் இப்படத்தில் சுவாரஸ்யமான தகவல்களுடன் காணலாம்.
ரெட்ட வாலு - வாலும் மக்களின் மனதை பற்றவில்லை.
இப்படத்தைப் பார்த்த எழுத்துத் தோழர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.