ஆள்

Aal Tamil Cinema Vimarsanam


ஆள் விமர்சனம்
(Aal Vimarsanam)

இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஆள்.

இப்படத்தின் கதாநாயகனாக வித்தார்த்தும், அறிமுகக் கதாநாயகியாக ஹர்டிகா ஷெட்டியும் நடித்துள்ளனர்.

அமைதியாகவும்,நேர்மையாகவும் வாழ்ந்து வரும் ஒரு இஸ்லாமிய பேராசிரியர் இளைஞனாக வித்தார்த், இவரின் மாற்று மதக்காதலியாக ஹர்டிகா ஷெட்டி நடித்துள்ளார்.சென்னையில் தாய், தங்கை, தம்பி ஆகியோருடன் இருந்து தன் கல்வியை முடித்துப் பின் சிக்கிமில் பேராசிரியராக பணிபுரிகிறார், வித்தார்த். ஒரு முறை கல்லூரி மாணவர்களின் பிரச்சனையை தீர்த்து வைத்து அந்த பிரச்சனைக்கு காரணமான இளைஞனை தன்னுடன் தங்க வைத்து அவ்விளைஞனுக்கு அறிவுரை கூறி மாற்ற நினைக்கிறார்.

ஒரு நாள் தன் காதலியிடமிருந்து அழைப்பு வர சிக்கிமிலிருந்து சென்னை வருகிறார். சென்னை வந்து இறங்கியதிலிருந்து வரும் அலைப்பேசி அழைப்புகளால் ஏற்படும் விளைவுகளையும், அவர் வாழ்கையில் ஏற்படும் மாற்றங்களையும் மீறி சிறந்த இந்திய இளைஞனாக தன் காதலியை கரம் பிடித்து தன் குடும்பத்தினருடன் இணைந்தாரா? என்பதை இப்படத்தில் விறுவிறுப்பாக காணலாம்.

வித்தார்த் நடிப்பில் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.பாடல்கள் ஓரளவு. இயற்கை காட்சிகள் கட்டிய விதம் சிறப்பு. பின்னணி இசை படத்தோடு நகர்கிறது.

ஆள் - மக்களின் மனதை முழுவதுமாக ஆளவில்லை.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-09-23 12:54:31
(0)
Close (X)

ஆள் (Aal) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே