மெட்ராஸ்
Madras Tamil Cinema Vimarsanam
(Madras Vimarsanam)
இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், மெட்ராஸ்.
இப்படத்தில் கார்த்தியும், அறிமுக கதாநாயகி கேத்ரின் தெரசாவும் நடித்துள்ளனர்.
வட சென்னையில் ஒரு சுவருக்காக இரு காலனியை சேர்ந்தவர்கள் சண்டையிடுவதும், பலியாவதும் என்ற சூழல் ஓடுகிறது. இதில் ஒரு காலனியை சேர்த்தவர்களாக கார்த்தியின் நண்பர் கூட்டம், மற்றொரு காலனியை சேர்ந்த எதிரி கூட்டம். கார்த்தியின் நண்பராக அன்பு வருகிறார்.நமக்கு இதுபோல் நண்பர் இல்லையே என்று ஏங்க வைக்கிறார் இவர்.ஒரே காலனியில் வசிக்கும் நாயகி கேத்ரினை காதலிக்கிறார். கேத்ரின், தன் கார்த்திக்கிடம் காதலை வெளிப்படுத்தாமல் தோழியாக கார்த்திக்கிடம் பழகுகிறார்.
காதல், நட்பு, மட்டைப்பந்து விளையாட்டு என்று ஒரு புறம் ஓட, அரசியலால் கார்த்திக்கு ஏற்படும் மாற்றங்களும் இழப்புகளும் அதனால் கார்த்திக்கு புரியும் அனுபவங்களையும் இப்படத்தில் பரபரப்புடன் காணலாம்.
வட சென்னை கதைக்குள் பார்ப்பவர்களையும் அக்கதாப்பாத்திரங்களோடு சேர்ந்து வாழ வைக்கும் அளவுக்கு சிறப்பான கதை. சென்னையில் இருக்கும் நினைப்பைத் தருகிறது. அழகாக காட்சி அமைத்துள்ளார், ஒளிப்பதிவாளர் முரளி.
இப்படத்தில் நடித்தவர்கள் தங்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரமாகவே மாறியுள்ளனர் என்பதை உணரலாம்.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.