காலை வணக்கம் .. அப்பு வருகிறான் .. ஐந்து...
காலை வணக்கம் ..
அப்பு வருகிறான் ..
ஐந்து வயதான அப்பு ஸ்மார்ட் ஃபோனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது தொலைபேசி ஒலித்தது.
அடுப்பறையில் இருந்த அவன் தாய் அவனிடம், "டேய் .. அப்பு ஃ போன்ல யாருன்னு பாருடா" என்று குரல் கொடுக்கவும், வெறுப்புடன் அவன் எழுந்து சென்று தொலைபேசியை எடுத்தான்,
"ஹலோ .. யாரு"
"ஐயா வீட்டுல இருக்காங்களா"
"அரை மணி நேரம் முன்னாடி வரை இருந்தாங்க"
"இப்போ" ?
"இப்போ இல்லை"
"ஐயோ பாவம் .. நேத்து நன்றாகத் தானே இருந்தாரு" "திடீரென்று என்ன ஆச்சு"
"ஆபீஸ்ல நிறைய வேலை இருக்குன்னு சொல்லி ஆபீசுக்குப் போயிட்டாரு"