பள்ளிகளில் .. மாணவர்களுக்கு பேருந்து வசதி உள்ளதா? சரியான...
பள்ளிகளில் ..
மாணவர்களுக்கு பேருந்து வசதி உள்ளதா?
சரியான கழிப்பறை உள்ளதா?
பிற மொழிகள் கற்று தரப்படுகின்றதா?
சரியான வகுப்பறைகள் உள்ளதா?
பள்ளியில்லிருந்து வெளியே சொல்லும் போதும் உள்ளே செல்லும் போதும் பாதுகாப்பு கட்டுப்பாட்டுத்துறை உள்ளதா?
விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதா?
பள்ளியை சுற்றிலும் குழந்தைகளுக்கு அமைதியான சூழல் கிடைக்கிறதா?
குழந்தைகளுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் ,சீருடைகள் மற்றும் இதர சலுகைகள் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா?
மற்ற பள்ளிகளோடு விளையாட செல்லும் போதோ அல்லது அவர்களுடன் போட்டி போடும் அளவிற்கு குழந்தைகளுக்கு மனதில் திறன் மற்றும் வெளித்தொற்றத்தின் திறன் வளர்க்க படுகின்றதா ?
எல்லா ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்களா?
இவை அனைத்து ஒரு பள்ளிக்கு முக்கியமானவைகள்...
இவைகள் அனைத்தையும் ஒரு பள்ளியில் சரியாக பராமரிக்க படுகின்றதா என்று தணிக்கை அரசாங்கம் செய்கிறதா?
இவைகள் இல்லை என்றால் பிள்ளைகளுக்கு எந்த விதமான மாற்றமும் அவர்கள் படிக்கும் பொழுது கிடைக்காது ...
அவர்களுக்கு இதை செய்தால் வசதியானவர்களாக இருந்தாலும் வசதி இல்லாதவர்களும் கண்டிப்பாக ஒரே பள்ளியில் தான் படிப்பார்கள் ....
எனது நம்பிக்கை உங்கள் விருப்பம் என்னவோ ...
அரசாங்கத்தால் முடியாதது ஒன்று இல்லவே இல்லை ...
அரசாங்கம் நினைத்ததால் தான் பள்ளிகள் உருவாகின..
அரசாங்கம் நினைத்தால் தான் படிக்காதவர்களின் குழந்தைகளும் பள்ளிக்கு வந்தன...
ஆனால்...
இன்று நாம் 21 நூற்றாண்டில் வாழ்கிறோம் இன்றும் அதையே குழந்தைகளுக்கு கொடுத்தல்...போதுமா?
அவர்கள் தான் அடுத்த தலைமுறையினர் ...
அவர்கள் ஆளப்போவது இந்தியாவை .....
அவர்களுக்கு ஆளும் அளவிற்கு வல்லமையை குழந்தையிலேயே கொடுக்கவேண்டியது நம் கடமை ...
இவை அனைத்தும் எங்கு கிடைக்கிறதோ அங்கு அவர்களை தேடி செல்ல வைப்பது தவறுதானே ...
" மாற்றமே இல்லாத வாழ்க்கை ..
வாழ்க்கை என்று சொல்ல முடியாது...."
" மாற்றத்தை கொண்டு வா பாரதத்தாயே .....
காமராஜர் போன்று பலரை உருவாக்கிடு நீயே .."