வெற்றியைத் தரும் விடா முயற்சி.... மகாகவி பாரதியாரின் வலிமைமிக்க...
வெற்றியைத் தரும் விடா முயற்சி.... மகாகவி பாரதியாரின் வலிமைமிக்க வரிகளில் சில துளிகள்...
முயற்சி மேற்கொண்டால் வெற்றியை எட்டும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். லட்சியத்தை தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூடாது.
ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். யாருக்காகவும் எதற்காகவும் பயம் கொள்ளாதீர்கள். இதை பின்பற்றினால் வாழ்வில் ஒருபோதும் துன்பம் நம்மைத் தீண்டாது.
ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் கல்வி அவசியம். அப்பொழுதுதான் சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் மறைந்து சமதர்ம சமுதாயம் உண்டாகும்.
பகுத்தறியும் ஆற்றல் இல்லாத யாருக்கும் கொள்கை ஒன்றும் இருக்காது. "இதுவே என் கொள்கை" என்று வாழ்பவனிடம் பகுத்தறியும் ஆற்றல் நிறைந்து காணப்படும்.
தன்னம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி உறுதி. நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும். விடாமுயற்சியே வெற்றியை கொண்டு வந்து சேர்த்துவிடும்.
எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் நேர்மை இருக்கும் என்றால் அக்னிக்கு நிகரான ஆற்றல் நம்மிடம் உண்டாகி விடும்.
- பாரதியார் -