எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முதுமையில் இளமை நினைவுகள் .. வெண்டுறை .. உறங்கும்...

முதுமையில் இளமை நினைவுகள் ..

வெண்டுறை ..

உறங்கும் கணவனை உசுப்பி எழுப்பி
உறங்கும் போழ்தில் ஒருகரம் என்மேல்
இருந்தது நாளும் என்றதும் கணவன்
ஒருகரம் வைத்தான் அவள்மேல்

சித்தம் குளிர்ந்து பற்றிய வேளை
முத்தம் தருவது வழக்கம் என்றாள்
நித்திரை விடுத்து கன்னம் மீதில்
முத்திரை இட்டான் அவனும்

முத்திரை பதித்த கன்னம் மீதில்
எத்தனை முறைகள் கடித்தீர் என்றாள்
கோபம் கொண்ட கணவன் உடனே
வேகம் விடுத்தான் நடையை

சார்த்திய கதவை கணவன் திறக்க
போவது எங்கே என்றே கேட்க
கழற்றிய பல்லை எடுத்துவந்து கடிக்கும்
வரையில் பொறுத்திரு என்றான்

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 6-Jul-15, 7:01 pm

மேலே