இதுவும் சுஜாதாவின் எழுத்திலிருந்து: "எல்லா இலக்கியத்திலும் சம்பிரதானமான கவிதைக்கான...
இதுவும் சுஜாதாவின் எழுத்திலிருந்து:
"எல்லா இலக்கியத்திலும் சம்பிரதானமான கவிதைக்கான கருப் பொருள்களான காதல், வீரம் இவைகளை விட்டு வைக்கவில்லலை. புகுந்து விளையாடிவிட்டார்கள்... அதனால்தான் நம் கவிஞர்கள் காதல் பற்றி எழுதும்போது நம்மைவிட திறம்பட நமக்கு முன்னர் எழுதிவிட்டார்கள் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.
வீரம் பற்றி எழுதுவதானால் புறநானூற்றை மிஞ்சுவது கஷட்டம். ஔவையார் அதியமானைப் புகழும் போது 'இங்கே உன் வேலெல்லாம் பளபளப்பாக புதுசு போல இருக்கிறது. அங்கு அதியமானிடம் இருக்கும் வேல் பகைவரைக் குத்தி நுணியெல்லாம் மழுங்கி கொல்லன் உலைக்களத்தில் ரிப்பேருக்காக சிதறிக்கிடக்கிறது' என்று சொல்லும் பாட்டின் நவீனத்தை நம் ஏ.கே 47-களுக்குக் கொண்டு வர முடியுமா?
அதனால்தான் புதுக்கவிதை சம்பிரதாயமான விஷயங்களை விட்டு விட்டு ரேஷன் க்யூவில் நிற்றல், வேலை தேடுதல், அப்பாவின் நண்பரிடம் சிபாரிசுக்குச் செல்லுதல், போன்ற இந்தக்கால விஷயங்களை எடுத்துக் கொள்ளுதல் நலம். நல்ல கவிதைகள் பெரும்பபாலும் எழுதப்பட்டுவிட்டன!"
- சுஜாதா ஆகஸ்ட் 1992