விளை நிலக்காட்சிகள் -7 பட்டிப் பொங்கல் சென்ற எண்ணத்தின்...
விளை நிலக்காட்சிகள்-7
பட்டிப் பொங்கல்
பட்டிப் பொங்கல்
சென்ற எண்ணத்தின் பொங்கல் விழா தொடர்ச்சி .
படம்:1
சூரியன் மறையும் நேரம் காலை முதல் மாலை வரை எங்களோடு பொங்கல் கொண்டாடி விட்டு மலையில் கதிரவன் மறையும் நேரம். (வீட்டின் கூரையில் நின்று எடுத்த படம்) எங்கள் பட்டிப் பொங்கல் ஆரம்பமாகும் நேரம்
படம்:2
சாணத்தால் மெழுகப்பட்டு கோலமிட்டு பட்டி தயார். வழக்கமாக பட்டியில் ஓரத்தில் பூவைப்பதில்லை. பட்டிக்குள் மட்டுமே பூக்கள் இருக்கும் இந்த முறை அதிகம் பூத்ததால் அதைக்கொண்டு எங்கள் குட்டி வாரிசுகள் செய்த வேலைப்பாடுதான் இந்த பூ பட்டி.
ஜல மூலை எனப்படும் நீர் மூலையில் சிறு குழிபோல் தெரியும் அதுதான் கிணறு / அதுதான் வயல் ( இதன் பின்னணியில் உள்ள பாரம்பரிய வரலாறுக்கென்றே தனி எண்ணம் எழுதுவேன்)
படம்:3
பட்டிக்கு பூசை.
படம்: 4
பட்டி கலைத்தல் வயல் கலக்குதல், வயல் மிதித்தல், கிணறு மிதித்தல், பட்டி புகுதல் போன்ற எல்லாவற்றின் பின்னணியும் இதில் அடங்கும்.
படம் :5
மேலே சொன்னவற்றின் தொடர்ச்சிதான் இது. நாங்கள் வளர்க்கும் உறவுகளில் யார் மூத்தவரோ அவர்தான் இந்த நிகழ்ச்சியில் பட்டி கலக்கும் / கலைக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்.அவர் காலை வைத்து அந்த சடங்கை முடித்த பின்தான் இந்த பட்டிக்குள் எங்கள் கால்படும். (இதற்கு முன்னுள்ள படத்தில் எங்கள் கால் பட்டிக்கு வெளியில் இருப்பதை பார்த்தால் புரியும்) இதன் பின் சிறப்பு விருந்தினருக்கும் அவற்றின் வாரிசுகளுக்கும் அவற்றின் மற்ற உறவுகளுக்கும் மீண்டும் ஒரு முறை பொங்கல் தரப்படும்.அதை ருசித்துவிட்டு அவர்கள் ஓய்வெடுப்பார்கள்.
நாங்கள் குடும்பமாக அமர்ந்து எல்லாவற்றையும் பேசியபடியே இதற்கு முன் பதிவிட்ட தென்னை மரத்தினடியில் வட்டமாக அமர்ந்து பொங்கலோடு இரவு உணவையும் சேர்த்து வாழை இலையில் ருசிப்போம். இதன் பிறகு தான் மாமா, சகலை, மச்சினிச்சி, மச்சான், மனைவி,எங்கள் வாரிசுகள் என கேலியும் கிண்டலுமாக களை கட்டும். இந்த வருடம் இரவு 1 மணி வரை தொடர்ந்தது.