"------------------அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?" பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்...
"------------------அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?"
பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் மின்னல் இடி மழையின் போது,
தனது பட்டத்தின் 'மாஞ்சாக் கயிறு' (அது கம்பியாக இருந்ததால்) வழியாக ஒரு உதை வாங்கிக் கொண்டு மின்னாற்றாலைக் கண்டு பிடித்த்து நமக்குப் பாடமாக வைத்திருந்ததால் தெரியுமல்லவா?
மின்சாரம் எதனால் ஆனது?
எலெக்டரான்களாலானது(என்று வைத்துக் கொள்வோம்).
எலெக்ட்ரான்கள் எதனால் ஆனவை?
ஒரு சிறு சக்திக் குமிழ்-சோப்புக் குமிழ் போல,
ஆனால் அணுவை விடச் சிறியதாக.
அந்தச் சிறு சக்திக் குமிழ் எதனால் ஆனது?
அதற்குள்ளே உள்ள அந்தச் சக்தி எதனால் ஆனது?
சர்வ நிச்சயமாக எந்தப் பொருளாலும் ஆனதில்லை!
ஆகவே உலகிலுள்ள எல்லாப் பொருட்களும்,
நீங்களும் நானும்,
உங்களுடைய பொருட்களும்,
கம்ப்யூட்டரும்,
செல் ஃபோனும்,
உங்கள் பையிலுள்ள பணமும்,
நீங்கள் உண்ணும் உணவும்
..............எல்லாம்... எல்லாம்...
இந்த எலெக்ரட்ரான், ப்ரொட்டான், ந்யூட்ரான், மற்ற ட்ரான்களுமாகிய சக்திக் குமிழ்களால்தான் ஆனவை!!!!
"..............அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?".............மஹாகவி பாரதியின் வாயிலிருந்து, நூறாண்டுகட்கு முன்பு வந்த கவிச் சொற்கள்!
அதுதான் பாரதி என்னும் மஹா மாமேதை!
காலத்திற்கு முன்னதாக அவசரரமாகத் தோன்றியவன்! அவனிற்குப் பிறகு வந்த அரைகுறை
அழிவியல் அஞ்ஞானிகள்
ஆராய்ச்சி, ஏழாய்ச்சி..........
நூறாய்ச்சி எல்லாம் செய்து 'கண்டு பிடித்ததை'
தனது சக்தி ஞானத்தால் கண்டறிந்தான் பாரதி!
சக்தி ஞானத்தோடு பிறந்தான் பாரதி!
அதைத்தான் அவன் 'சக்தி, சக்தி, சக்தி' என்று அத்தனை முறை நமக்காகப் புலம்பினான்!
அதை உணறும் சக்தி நமக்கு அன்றும் இல்லை!
இன்றும் இல்லை!
இதைப் படித்த பிறகு,
தில்லை இரகசியம், அருணாச்சல ஜோதி, அமர்னாத் ஜோதிர் லிங்கம்,
சபரி மலை மகர ஜோதி
....................எல்லாம் புரியும், உங்களுக்கு!
நான் உரையாடலில் குறிப்பிட்ட ஆஸ்ட்ரா இதுவேதான்!
இப்போது நமது உரையாடலை மீண்டும் படித்துப் பாருங்கள்!
"Auztral Powers;
The True State of a Pure Human being like Bhaarathi, Ghandhi, Valluvap Perunthagai. It is acquired by practice AND UNBIASED HEART! எங்களுடைய பேராசான் 'நாயர் சான்' அவர்களின் வரிகள். இதை அழிவியலாளர்கள் "Alpha Absorption" என்கிறார்கள்!
இதிகாசக் கண்ணன் ஒரு ஆஸ்ட்ரா மனிதன்.
அதனால்தான் அவன் குசேலருடைய ஒரே ஒரு கைப்பிடி அவலை உண்டு வயிறு நிறைந்தான்!
அதனால்தான் வள்ளளுவர் தமிழை அறிந்தார்; தமிழ் அவரை அறிந்தது; பாரதி தமிழை உணர்ந்தான்; தமிழ் அவனை ஊட்டி வளர்த்தது.
பிறவி மேதை!
ராமாநுஜன்;
காமராஜர்;
ஜிடி நாயுடு;
செஸ் விஸ்வநாதன்;
கென்னடி;
ஐன்ஸ்டீன்;
லியனார்டொ டாவின்ஸி;
மிக்கேல் ஏஞ்செலோ---------
------அனைவரும் ஆல்ஃபா மனிதர்கள்!"
"மிகக் குறைவாக உண்டு;
மிக மிகக் குறைவாக உறங்கி;
மிக மிக மிகக் குறைவாக ஓய்ந்து;
உலகிற்காக அதனுயர்விற்காக வாழ்ந்தவர்கள்!
அக உணர்வை ஆண்டவர்கள்; ஆன்றவிந்து அடங்கியவர்கள்!"
"இன்னும் ஆழமாகப் பிறகு!
இப்போது சொல்லத் துவங்கினால் உங்களுக்கும் தூக்கம் போய் விடும்!"
நமது தாய் நாடும்,
தமிழகமும்,
தமிழும்,
தமிழர்களின் பண்டைய இலக்கியங்களும்,
'உலகிற்கே நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும் மொழ்யையும் கற்பித்தவர் தமிழர்' என்பதும்
'வெறும் வார்த்தை ஜாலம் இல்லை!'
இதற்கு எந்தப் படத்தை வைப்பது? எனக்குத் தோன்றியதை வைத்துள்ளேன்!
------------------------------------செல்வப் ப்ரியா