எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண் ~~~~~~ தானே முயன்று தானே சுழன்று தானே...

பெண்
~~~~~~
தானே முயன்று தானே சுழன்று
தானே எல்லாம் செய்து கொள்ளும்
தானியங்கி இயந்திரமாய் பெண் !!
தன்னைப் பாராட்ட ஆள் இல்லை... கவலையும் இல்லை !!!
தன்னை சீராட்ட ஆள் இல்லை..... கவலையும் இல்லை !!!!

தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு
தன்னைத் தானே சீராட்டிக் கொண்டு
தனக்குள்ளேயே ஒரு நீர்குமிழியாய்...
தனக்குள்ளேயே ஒரு கேள்விக்கு குறியாய் ....

தனக்குள் தானே சிரித்துக் கொண்டு
தனக்குள் தானே அழுதுக் கொண்டு
துவண்டாலும் தலை நிமிர்ந்து
தூற்றினாலும் அதை மறந்து
தானே வாழும் சுயம்பு பெண் !!


**** ஆக்கம் கிரிஜா சந்துரு

பதிவு : ரா கிரிஜா
நாள் : 21-Sep-16, 8:51 am

மேலே